யாழில் அத்தானுடன் காதல்: அக்காவின் கண்டிப்பில் தங்கை தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவனும் மனைவியின் தங்கையுடன் காதல் தொடர்பில் ஈடுபட்டிருப்பதை அறிந்த மனைவி தங்கையை கண்டித்ததையடுத்து, அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பகிரங்கமானது.

சம்பவத்தில், உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பாடசாலை மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிக்ரொக் மூலமாக 22 வயதான காவாலியொருவருடன் தனது சகோதரியின் திருமணத்தில் இணைந்திருந்தார். இத்திருமணத்திற்குப் பிறகு கணவன், வேலைக்கு செல்லாது தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாகவும், சமீபத்தில் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஆரம்பிக்க உள்ளதாக ரிக்ரொக் தளத்தில் அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவரது மனைவியின் தங்கையுடன் காதல் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து, மனைவி தனது பெற்றோரின் வீட்டில் தங்கையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் மன உளைச்சலால் மாணவி தோட்டப் பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில் குதித்தார். அருகிலிருந்த உறவினர்கள் மற்றும் அக்கா உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு மாணவியை உயிருடன் மீட்டனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மாணவியின் அத்தானை சிலர் தாக்கியதாகவும், தற்போது குறித்த நபரின் ரிக்ரொக் தளம் செயற்படவில்லை என்றும் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments